ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.21 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.21 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.21 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
Published on

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.21 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.

கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 86 விவசாயிகள் 657 மூட்டை கொப்பரையை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

வரத்து அதிகரிப்பு

தாராபுரம், காங்கேயம், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 10 வியாபாரிகள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் 360 மூட்டை முதல் ரக கொப்பரை கிலோ ஒன்று 73 ரூபாய் 46 காசு முதல் 79 ரூபாய் 9 காசு வரை ஏலம் விடப்பட்டது. 297 மூட்டை கொண்ட 2-ம் ரக கொப்பரை தேங்காய் கிலோ ஒன்று 46 ரூபாய் 90 காசு முதல் 68 ரூபாய் 26 காசு வரை ஏலம் போனது. கடந்த வாரத்தை விட 175 மூட்டைகள் வரத்து அதிகரித்தது. மேலும் கிலோவிற்கு 76 காசுகள் விலை அதிகரித்துள்ளது. நேற்று நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் மொத்தம் 20 லட்சத்து 99 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. இதை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com