முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு

முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு
Published on

வெள்ளியணை அருகே உள்ள காணியாளம்பட்டி காணிகளத்தூர் முருகன் கோவிலில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு இளநீ, பன்னீ, பால், தயி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

இதேபோல் புன்னம்சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

வேலாயுதம்பாளையம் புகழிமலையில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுவாமிக்கு பால்,தயிர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு,தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com