உயிரை பணயம் வைத்து கடத்தல்காரர்களைப் பிடித்த காவலரை நேரில் அழைத்து முதல் -அமைச்சர் விஜய் பாராட்டு...!

காரை மடக்கிப்பிடித்த காவலர்கள் காரிலிருந்து சுமார் 233 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
உயிரை பணயம் வைத்து கடத்தல் காரரை பிடித்த தலைமை காவலருக்கு பரிசு வாங்கி பாராட்டிய முதல் - அமைச்சர்
தலைமை காவலருக்கு பரிசு வாங்கி பாராட்டிய முதல் - அமைச்சர்
Published on: 

சென்னை,

தனது உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல்காரர்களை பிடித்த காவலரை நேரில் அழைத்து முதல் - அமைச்சர் விஜய் பாராட்டினார்.

முதல் - அமைச்சர் பாராட்டு

கோவை மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒரு கார் நிற்காமல் சென்றது. அந்த காரின் மேற்கூரை மீது கோவில்பாளையம் காவல் நிலையத்தின் தலைமை காவலர் வேல்முருகன் ஏறிக்கொண்டார். காரின் மேற்கூரையில் காவலர் இருப்பது தெரிந்தும் கடத்தல் காரர்கள் விளாங்குறிச்சியில் இருந்து அவிநாசி சுமார் 40 கி.மீ வரை காரை ஓட்டிச் சென்றனர்.

தலைமை காவலருக்கு பரிசு வாங்கி பாராட்டிய முதல் - அமைச்சர்
தலைமை காவலருக்கு பரிசு வாங்கி பாராட்டிய முதல் - அமைச்சர்

பின்னர் அந்த காரை மடக்கிப்பிடித்த காவலர்கள் காரிலிருந்து சுமார் 233 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். அதிலிருந்த 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் உயிரை பணயம் வைத்து திருடர்களை பிடித்த கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகனை முதல் - அமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்துப் பாராட்டி, பரிசு வழங்கினார். அப்போது, தலைமைக் காவலர் ம.வேல்முருகனிடம், பணியின்போது கவனமாகவும், பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டுமென்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com