திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
Published on

ஆறுமுகநேரி:

ஆத்தூர் முஸ்லிம் தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2021- 22 ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இதில் மாணவிகள் தஸ்விமா பானு, ஜீனத் சமீரா, இந்து பிரசன்னா, வீரவாகு வீரம் வீரமணி ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு பள்ளியில் வைத்து பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.கமாலுதீன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக ஆறுமுகநேரி ஆதவா தொண்டு நிறுவன நிறுவனர் ஜெ.பாலகுமரேசன் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் வடக்கு ஆத்தூர் ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகிகள், பெற்றோர்கள், நகர பஞ்சாயத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் தேவசகாயம் நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com