தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு

தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு
Published on

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகள் தங்கம்(வயது 20). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் கலந்து கொண்டு, தங்கப்பதக்கம் வென்றார். அவரை மாநில நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்க தலைவர் சண்முகராஜா, அரியலூர் மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் தர்மராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com