குமரி மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.!

கடல் சீற்றத்தால் குளச்சல், முட்டம் கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
குமரி மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.!
Published on

குமரி,

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் தற்போது கடந்த 1-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் விசைப்படகுகள் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் வள்ளங்கள், கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன்பிடித்து வருகின்றன.

இந்த நிலையில், குளச்சல் கடல் பகுதியில் இரு நாட்களாக பலத்த காற்று வீசியது. இதனால் கடல் சீற்றமாக காணப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக 3வதுநாளாக கன்னியாகுமரி நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

குளச்சல், முட்டம், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன. மேலும், கடல் சீற்றத்தால் குளச்சல், முட்டம் கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com