முத்துமாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

முத்துமாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
முத்துமாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
Published on

வடகாட்டில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாபிஷேகத்தையொட்டி குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பெண்கள் குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com