அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் எல்.முருகன் சந்திப்பு

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தற்போது முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரையும் சந்தித்து பேசி வருகிறார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் எல்.முருகன் சந்திப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன.

அதிமுக சார்பில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜகவிற்கு 20 தொகுதிகளும், பாமகவிற்கு 23 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளின் பட்டியலை இறுதி செய்வது குறித்து தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தற்போது முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரையும் சந்தித்து பேசி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com