விபத்தில் கூலித்தொழிலாளி சாவு

ராசிபுரம் அருகே விபத்தில் கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விபத்தில் கூலித்தொழிலாளி சாவு
Published on

ராசிபுரம்

ராசிபுரம் அருகே உள்ள வெற்றி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 69). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலையில் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மொபட்டில் ஆண்டகளூர்கேட்டை நோக்கி சென்றார். அப்போது சேலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் நாமக்கல் நோக்கிச் சென்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரச்செல்வன் (19) என்பவரது மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் படுகாயமடைந்த பாலசுப்பிரமணியம் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது பற்றி ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com