ராஜா வாய்க்காலில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி சாவு

பரமத்திவேலூர் அருகே ராஜா வாய்க்காலில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி இறந்தார்.
ராஜா வாய்க்காலில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி சாவு
Published on

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் நல்லாட்சி (வயது74) கூலித்தொழிலாளி. இவர் கடந்த 24-ந் தேதி காலை வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. காணாமல் போன நல்லாட்சியை அவரது மகன்கள் செந்தில்குமார், பார்த்திபன் ஆகியோர் உறவினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று பரமத்திவேலூரில் இருந்து நன்செய் இடையாறு செல்லும் வழியில் உள்ள வாஞ்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள ராஜா வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராஜா வாய்க்காலில் மிதந்த ஆண் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்த 24-ந் தேதி கூலி வேலைக்கு சென்று விட்டு நல்லாட்சி வீட்டிற்கு செல்ல ராஜா வாய்க்கால் கரையில் நடந்து வந்து கொண்டிருந்ததாகவும், அப்போது ராஜா வாய்க்கால் கரையோரத்தில் கீழே விழுந்து கிடந்த தேங்காயை எடுத்த போது திடீரென ராஜா வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசா அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com