ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி பலியானார்.
ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
Published on

தொழிலாளி

பெரியபாளையம் அடுத்துள்ள ஆரணி தமிழ் காலனியை சேர்ந்தவர் சம்பத் (வயது 57). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனர். சம்பத் ஊத்துக்கோட்டை அடுத்துள்ள அம்பேத்கர் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் இயற்கை உபாதையை கழிக்க நேற்று காலை சிற்றப்பாக்கத்தில் உள்ள ஆரணி ஆற்றின் கரையோரத்துக்கு சென்றார். சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக ஆரணி ஆற்றில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சம்பத் கால் தவறி தண்ணீரில் விழுந்து மூழ்கியதாக கூறப்படுகிறது.

பலி

அவரது உடல் தண்ணீரில் மிதப்பதைக் கண்ட அந்த பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com