மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
Published on

பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி காளீஸ்வரி (வயது 60). இவர், கடந்த 2014-ம் ஆண்டு பாப்பம்பட்டியில் உள்ள ரீச்வாய்க்கால் பகுதியில் நடந்து வந்த போது, அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான பாலன் என்ற பாலுச்சாமி (34), காளீஸ்வரியை கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர் கத்தியால் காளீஸ்வரியை தாக்கி அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலன் என்ற பாலுச்சாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்த நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு பழனி சப்-கோர்ட்டில் நடந்து வந்தது. பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை நேற்று நிறைவடைந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட பாலுச்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயசுதாகர் தீர்ப்பு கூறினார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com