கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்: டெண்டரில் பங்கேற்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம்

லேப்டாப் வழங்குவதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசு கடந்த மே மாதம் வெளியிட்டது.
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்: டெண்டரில் பங்கேற்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம்
Published on

சென்னை,

தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டு பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில், 'தமிழகத்தில் பல்வேறு கலை, அறிவியல், என்ஜினீயரிங், வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் படித்து வரும் மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்க அரசு திட்டமிட்டு உள்ளது

முதல்கட்டமாக அடுத்த 2 ஆண்டுகளில், 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில், ஒவ்வொருவருக்கும் லேப்டாப் வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், 20 லட்சம் லேப்டாப் வழங்குவதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசு கடந்த மே மாதம் வெளியிட்டது.

இந்த டெண்டரில், லேப்டாப் தயாரிப்பின் முன்னணி நிறுவனங்கள் பல ஆர்வம் காட்டியுள்ளன. அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதிக்குள் இறுதி செய்ய எல்காட் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com