சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து வந்த விமானம் மீது லேசர் ஒளி - போலீஸ் விசாரணை

சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து வந்த விமானம் மீது லேசர் ஒளி பாய்ந்து குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து வந்த விமானம் மீது லேசர் ஒளி - போலீஸ் விசாரணை
Published on

இலங்கை தலை நகர் கொழும்பில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை 4.50 மணி அளவில் விமானம் வந்தது. அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக படிப்படியாக பறக்கும் உயரத்தை குறைத்துக்கொண்டு தாழ்வாக பறக்கத் தொடங்கியது. அப்போது அந்த விமானத்தின் முன்பகுதியில் பைலட் கேபினை நோக்கி லேசர் ஒளி பாய்ந்து அடித்தது. அந்த லேசர் ஒளி, விமானத்தை இயக்கிக்கொண்டிருந்த விமானியின் கண்களுக்கு நேராக அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நிலை குலைந்த விமானி, சமாளித்து மிகவும் சாமாத்தியமாக செயல்பட்டு பத்திரமாக விமானத்தை சென்னை யில் தரை இறக்கினா.

விமானத்தில் 146 பயணிகளும், 7 விமான சிப்பந்திகளும் இருந்தனர். இது சம்பந்தமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொ டுத்தார். கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், ரேடா கருவிகள் மூலமாக ஆய்வு செய்தனா. எந்த பகுதியில் இருந்து லேசர் ஒளி வந்தது என்று ஆய்வு செய்தபோ து பழவந்தாங்கல் பகுதியில் இருந்து வந்திருப்பதாக சந்தேகப்படுகிறார்கள்.

பழவந்தாங்கல் பகுதியில் உள்ள உயரமான கட்டிடத்தில் இருந்து விஷமிகள் யாரோ , சக்தி வாய்ந்த லேசர் கருவில் இருந்து ஒளியை விமானத்தை நோக்கி அடித்து இருக்கலாம் என தெரிகிறது. பழவந்தாங்கல் பகுதியில் உயரமான கட்டிடத்தில் இருந்து லேசர் லைட் அடித்து யார்? என்று சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருக்கின்றனா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com