த.வெ.க. தொழிற்சங்க பேரவை தொடக்கம்

சமீபத்தில் அ.தி.மு.க. தொழிற்சங்க பேரவையில் இருந்து கமலக்கண்ணன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது
த.வெ.க. தொழிற்சங்க பேரவை தொடக்கம்
Published on

சென்னை,

தி.மு.க.வில் தொ.மு.ச. பேரவை, அ.தி.மு.க.வில் அண்ணா தொழிற்சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் சி.ஐ.டி.யூ., இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆகிய தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்று பல்வேறு அரசியல் கட்சிகளில் தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டு மாநில, மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

தவெக

இதேபோல் தமிழக வெற்றிக் கழகத்திலும் தொழிற்சங்கம் தொடங்கப்பட இருக்கிறது. தொழிற்சங்கம் தொடங்குவதற்காக கட்சித் தலைவர் முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் தலைமையில் தீவிர ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக தொழிற்சங்க பேரவை என்னும் பெயரில் தொடங்கப்பட இருக்கும் தொழிற்சங்கம், அமைப்பு முறையின்படி இன்று பதிவு செய்யப்பட்டது.விரைவில் த.வெ.க. தொழிற்சங்க பேரவை பிரிவை த.வெ.க. தலைவர் முதல்-அமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்து, நிர்வாகிகள் பட்டியலையும் வெளியிட இருக்கிறார்.

சமீபத்தில் அ.தி.மு.க. தொழிற்சங்க பேரவையில் இருந்து கமலக்கண்ணன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. த.வெ.க.வில் மகளிர் அணி, வழக்கறிஞர் அணி என பல்வேறு அணிகள் இருக்கும் நிலையில், தொழிற்சங்கமும் தொடங்கப்பட இருப்பதால் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சி எழுந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com