கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
Published on

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டுக்குழு சார்பில் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வேலூர் பார் அசோசியேசன் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். கூட்டுக்குழு மாநில பொருளாளர் ரவி முன்னிலை வகித்தார். கூட்டுக்குழு துணைத் தலைவர் பாஸ்கரன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வக்கீல்கள், கோர்ட்டுகளில் இ-பைல் முறையை கைவிட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதில் முன்னாள் அரசு வக்கீல் பாலசந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com