முதல்-அமைச்சர் விஜய்யுடன் இடதுசாரி கட்சி தலைவர்கள் சந்திப்பு

இன்று மதியம் நடைபெற உள்ள கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் இடது சாரி கட்சிகள் பங்கேற்கவில்லை.
முதல்-அமைச்சர் விஜய்யுடன் இடதுசாரி கட்சி தலைவர்கள் சந்திப்பு
Published on

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை இடதுசாரி கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளனர்.

ஆலோசனைக் கூட்டம்

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) சார்பில் கூட்டணிக் கட்சிகளுடனான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

நேரில் அழைப்பு

இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணிக் கட்சித் தலைவர்களை அமைச்சர்கள் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.

அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு வழங்கப்பட்டது. நேற்று இடதுசாரி கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

கலந்துகொள்ளப் போவதில்லை

ஆனால், த.வெ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தாங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என்று இடதுசாரி கட்சிகள் தெரிவித்தன. கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும், முதல்-அமைச்சர் விஜய்யை இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது.

இடதுசாரி கட்சி

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை இடதுசாரி கட்சி தலைவர்கள் வீரபாண்டியன், பெ.சண்முகம் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com