

சென்னை,
திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பை நாளை முதல் தொடங்க ஆவன செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், பட்ஜெட் மீதான முழு விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மானியக்கோரிக்கை விவாதம் துவங்கப்போகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு நாளை முதலாவது தொடங்க தமிழக முதல்-அமைச்சர் ஆவன செய்யவேண்டும் என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.