கோத்தகிரி அருகே சாலையில் உலா வந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
கோத்தகிரி அருகே சாலையில் உலா வந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கோத்தகிரி கெட்சிகட்டி கிராமத்தில் இருந்து எம்.கைகாட்டி செல்லும் சாலையில் சிறுத்தை ஒன்று உலா வந்தது.

சாலையில் சிறுத்தை நடந்து செல்வதை அந்த வழியாக காரில் சென்ற இளைஞர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் காரை சற்று தொலைவில் நிறுத்தி, சிறுத்தை நடந்து செல்வதை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து, அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com