ஓரசோலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்... வீட்டு வளாகத்துக்குள் புகுந்தது - மக்கள் அச்சம்

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓரசோலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்... வீட்டு வளாகத்துக்குள் புகுந்தது - மக்கள் அச்சம்
Published on: 

நீலகிரி,

கோத்தகிரி அருகே ஓரசோலை கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சிறுத்தை உலா

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் உள்ள ஓரசோலை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி உலா வருவது வாடிக்கையாகி விட்டது. கடந்த 9-ந்தேதி நள்ளிரவில் இந்த பகுதியில் சிறுத்தை உலா வந்தது.

வீட்டு வளாகத்துக்குள் புகுந்தது

இந்த நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு மீண்டும் சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் வலம் வந்துள்ளது. அந்த சிறுத்தை வீட்டின் முன்புறம் இரை தேடி சாலையில் நடந்து சென்றதோடு, ஒரு வீட்டு வளாகத்திற்குள் புகுந்தது. அங்கு உணவு எதுவும் கிடைக்காததால், அங்கிருந்து அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து மறைந்தது.

பொதுமக்கள் கோரிக்கை

இந்த காட்சி அந்த வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தொடரும் சிறுத்தை நடமாட்டத்தால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை உலா வருவதை தடுக்கவும், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து, அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com