கோவில்பட்டியில்விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டியில்விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.
கோவில்பட்டியில்விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம்
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அலுவலகத்தில் தூத்துக்குடி, தென்காசி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மண்டல செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில துணை பொது செயலாளர் கலைவேந்தன் கலந்து கொண்டு பேசினார்.

புதிதாக நியமிக்கப்பட்ட தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சு. முருகன், மைய மாவட்ட செயலாளர் கணேசன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்க வளவன், தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம், கிழக்கு மாவட்ட செயலாளர் வசந்தகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தாமஸ் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் நகரச் செயலாளர் கருப்புசாமி பாண்டியன், சமூக ஊடக மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் மோகன், மகளிர் அணி அமைப்பாளர் விஜயா அந்தோணி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பிரபா வளவன், மாவட்ட செய்தி தொடர்பாளர் மனுவேல் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினா.

இக்கூட்டத்தில், வருகிற ஆக.17-ந் ததி கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குதல், ரத்ததான முகாம், பனை விதைகள் நடுதல் நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று மாநில பா.ஜ.க. அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com