

மதுரையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: எங்களுடைய தலைவர், தமிழகத்துடைய முதல்வர், அவரை தவிர்த்து எந்த சென்டரும் கிடையாது. அவர் ஒருவர்தான் ஒரே சென்டர். முன்னாடி தலைமைச் செயலகத்துக்குள்ள புரோக்கர்தான் இருப்பாங்க. இன்னைக்கு எந்த புரோக்கரும் தலைமைச் செயலகத்துல கிடையாது, பொதுமக்கள் தான் உள்ள இருக்காங்க. அதனால பொதுமக்களோட நிர்வாகிகள் எல்லாம் போய் பார்க்கிறாங்க, பார்த்துட்டு வராங்க. அதுல ஏதாவது தேவையில்லாமல் யாருக்காவது தொந்தரவு செய்தால் கண்டிப்பாக அதை முதல்வர் அனுமதிக்க மாட்டார்.
திமுக - அதிமுக தலைமையில் உள்ள இரண்டு குடும்பமும் அவர்களை காப்பாற்றிக்கொள்வதற்காக, ஆட்சி அதிகாரத்தில் இருந்தால்தான், அவர்கள் சொத்துகளை காப்பற்ற முடியும் என்பதற்காக அவர்களுக்குள் ஒப்பந்தம் போட்டு அரசு அமைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அது முடியவில்லை. தற்போது வரை இருவரும் ஆட்சி அமைப்பதற்கு குறுக்கு வழியில் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.இப்பொழுதும் சொல்கிறோம். நீங்கள் குறித்து வைத்து கொள்ளலாம். ஸ்டாலின் சார்ந்தப்பட்ட ஒரு சில நபர்களும், இபிஎஸ் சார்ந்த ஒரு சில நபர்களும் சேர்ந்தும் குறுக்குவழியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அதனை பிடிக்காமல் அவர்களது தொண்டர்கள் எத்தனை நாட்கள் இந்த குடும்பத்தை காப்பாற்றுவதற்கு அவர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். நேர்மையாக அரசியல் செய்து, களத்தில் மக்களோடு மக்களாக இருக்கும் நிர்வாகிகள் யாரும் இதை ஏற்றுக்கொள்ளாமல், எல்லோரும் வந்து தவெகவில் சேருகிறார்கள். அவர்களையும் அரவணைத்து, அவர்களுக்கு தேவையான அளவு, இருப்பிடத்தை ஏற்படுத்த எங்களது கட்சியில் கொஞ்சம் நாட்கள் எடுக்கும். அதனை தான் நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம். நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் எங்களின் நிலைப்பாடு ஆகும். நீட் தேர்வை மத்திய அரசால் நடத்த முடியவில்லை.பாஜக ஆளும் மாநிலங்களில்தான் தவறு நடக்கிறது” இவ்வாறு அவர் கூறினார்.