காவலர்களின் வீரம் மற்றும் தியாகத்தை போற்றுவோம் - எடப்பாடி பழனிசாமி

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த காவல்துறை வீரர்களின் தியாகத்தை போற்றுவோம் என எடப்பாடி தெரிவித்துள்ளார்.
 எடப்பாடி பழனிசாமி பதிவு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on: 

சென்னை,

உயிரை துச்சமென நினைத்து பணியாற்றும் காவலர்களின் வீரமும் தியாகமும் போற்றுதலுக்குரியது என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் - அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

காவலர் வீரவணக்க நாளான இன்று, மக்களின் பாதுகாப்பிற்காகவும், நாட்டின் அமைதிக்காகவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த காவல்துறை வீரர்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றுவோம்.

கடமையே உயிர்மூச்சாகக் கொண்டு, பொதுமக்களின் நலனுக்காகத் தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி பணியாற்றும் காவலர்களின் வீரமும் தியாகமும் என்றும் போற்றுதலுக்குரியது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com