

சென்னை,
காவிரி காக்க கைகோர்ப்போம்.... வாருங்கள் இளைஞர்களே! என அன்புமணி ராமதாஸ் அழைப்பு. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தீமைகளை தடுக்கும் திறனும், உரிமைகளை காக்கும் உணர்வும் கொண்ட உங்களை தான் நான் நம்பியிருக்கிறேன். காவிரியில் கர்நாடகம் கட்ட துடிக்கும் மேகதாது அணை என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, கர்நாடகத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும். 12500 ஏக்கர் வனப்பகுதிகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் என மேகதாது அணையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எல்லையில்லாதவை.
சில லட்சம் பேரின் குடிநீருக்காக இவ்வளவு பெரிய பேரழிவை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இந்த பேரழிவை தடுக்கும் முயற்சிகளுக்கு நான் வழிகாட்டுகிறேன்.... ஆனால், அதை தடுத்து நிறுத்தும் திறன் உங்களுக்கு தான் உண்டு. உலக வரலாற்றில் இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளும் உண்டு.
அதனால் தான் உங்களை அழைக்கிறேன்..... வாருங்கள் இளைய தலைமுறையினரே, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடையை தகர்த்தை போல மேகதாது அணை சதியையும் தகர்ப்போம்!
உங்களுக்காக பிலிகுண்டுலுவில் காத்திருப்பேன்...!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.