“வெள்ளையனே வெளியேறு இயக்க வீரர்களை நினைவுகூர்வோம்” – எல்.முருகன்

மகாத்மா காந்திஜியின் தலைமையால் “வெள்ளையனே வெளியேறு” என்ற முழக்கம், உத்வேகம் பெற்றது.
எல்.முருகன்
Published on

சென்னை,

வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைத்து வீர ஆத்மாக்களையும் ஆழ்ந்த நன்றியுடன் நினைவுகூர்கிறோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய இணை-மந்திரி எல். முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைத்து வீர ஆத்மாக்களையும் ஆழ்ந்த நன்றியுடன் நினைவுகூர்கிறோம். மகாத்மா காந்திஜியின் தலைமையால் உத்வேகம் பெற்ற “வெள்ளையனே வெளியேறு” என்ற முழக்கம், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்குப் புதிய வலிமையையும் உறுதியையும் ஊட்டியது.

அது, காலனி ஆதிக்கத்தின் தளைகளை உடைத்து சுதந்திரம் அடைய வேண்டும் என்ற நமது மக்களின் அசைக்க முடியாத உறுதியைப் பிரதிபலித்தது. அவர்களின் துணிச்சல், தியாகம் மற்றும் தேசபக்தி உணர்வு ஆகியவை இந்தியத் தலைமுறைகளுக்கு என்றென்றும் உத்வேகம் அளிக்கும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com