வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கான நலனை வென்றெடுப்போம்! - ஆதவ் அர்ஜுனா

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கான நலனை வென்றெடுப்போம்! - ஆதவ் அர்ஜுனா
Published on

சென்னை,

தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி 104-வது வார்டில் நேற்று தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டோம்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அண்ணனாக, தம்பியாக, அவர்கள் வீட்டுப் பிள்ளையாக மக்கள் என்னை வரவேற்று வாழ்த்தினார்கள். கழகத் தலைவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, கழகத்தின் வெற்றி வேட்பாளராக என் மீது மக்கள் காட்டிவரும் அன்பு ஆகிய அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி கழக ஆட்சி அமையப்போவதைக் கூறுகிறது.

ஏழை, எளிய மக்கள் வாழும் வில்லிவாக்கம் தொகுதிக்கு திமுக ஆட்சி காட்டிவந்த பாரபட்சத்தை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். மக்கள் மீது உண்மையாக அக்கறை வைத்திருப்பவர்கள் யார் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்.

விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம்!

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கான நலனை வென்றெடுப்போம்!!

நம்மால் முடியும்!!!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com