

சென்னை,
தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அம்பேத்கர் சாலை, வில்லிவாக்கம் சந்தை, வில்லிவாக்கம் ரெயில்நிலைய சாலை, ஆர்.வி. நகர், திருமலை காம்ப்ளக்ஸ், கிழக்கு மாதா தெரு மற்றும் சீயலம் தெரு ஆகிய பகுதிகளில் நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டோம்.
தெருவோர சாலை வியாபாரிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் நம்மை உற்சாகத்துடன் வரவேற்றனர். விலைவாசி நிலைமை, வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள், தேவையான கோரிக்கைகள் போன்றவற்றை நம்மிடம் பகிர்ந்தார்கள்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சி அனைத்து தரப்பு மக்களுக்கும் பாரபட்சமற்ற வளர்ச்சியை உறுதிப்படுத்தும். கழகத் தலைவர் தலைமையிலான அரசு எளிய மக்களின் முன்னேற்றம் மீது அதிக அக்கறை கொண்டிருக்கும். வில்லிவாக்கம் தொகுதியின் வெற்றி வேட்பாளராக நான் தங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன், தங்கள் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்தேன்.
விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம்!
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கான நலனை வென்றெடுப்போம்!!
நம்மால் முடியும்!!!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.