திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும்- டிடிவி தினகரன்

திமுகவை வீழ்த்த வேண்டும், ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றாக இணைந்திருக்கிறோம் என்று டிடிவி தினகரன் கூறினார்.
திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும்- டிடிவி தினகரன்
Published on

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - "திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும். அதிமுக தலைவர்களான எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் ரோல் மாடல் என்று கூறிக்கொள்ளும் விஜய், அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சிக்கிறார்.

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்தான் செங்கோட்டையன். விஜய் எங்களது எதிரி அல்ல, எங்களுடைய ஒரே எதிரி திமுகதான். திமுகவை வீழ்த்தவே நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். கனிமொழி டெல்லி சென்று வந்தால் அமைதியாக இருக்கிறீர்கள், நானோ, ஓபிஎஸ் அல்லது எடப்பாடி பழனிசாமி சென்று வந்தால் அழுத்தம் என்கிறீர்கள், டெல்லிதான் உங்கள் கட்சி தலைமையா? என்று கேட்கிறீர்கள்.

Also Read
குற்றச்சம்பவங்களோடு திமுகவினர் பின்னிப் பிணைந்திருப்பதுதான் திராவிட மாடலா? - டிடிவி தினகரன்
திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும்- டிடிவி தினகரன்

திமுகவை வீழ்த்த வேண்டும், ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றாக இணைந்திருக்கிறோம். ஓபிஎஸ் என்னுடைய அண்ணன்தான். செங்கோட்டையன் உள்ளிட்டோர் மற்ற கட்சிகளுக்கு சென்றது வருத்தம் இருக்கிறது. ஆனால், தனிநபர்கள் சென்று ஒரு இயக்கத்தை பாதிக்க முடியாது. நாங்கள் பிரிந்திருந்ததால் போன முறை தோல்வியுற்றோம்.

Also Read
விஜய் வாங்கும் சம்பளம் கருப்பா? வெள்ளையா? - ஜெயக்குமார் கேள்வி
திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும்- டிடிவி தினகரன்

அதனை உணர்ந்ததால் இந்த முறை இணைந்திருக்கிறோம். இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக இணைந்திருக்கிறோம். என்ன குழப்பம் விளைவிக்க நினைத்தாலும் ஒன்றும் நடக்காது" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com