வளமிக்க தமிழ்நாட்டை உருவாக்குவோம்: முதல்-அமைச்சர் விஜய் குழந்தைகள் தின வாழ்த்து

தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெருமைக்குரியவர் பண்டித ஜவஹர்லால் நேரு என்று விஜய் தெரிவித்துள்ளார்.
வளமிக்க தமிழ்நாட்டை உருவாக்குவோம்: முதல்-அமைச்சர் விஜய் குழந்தைகள் தின வாழ்த்து
Published on: 

சென்னை,

தன் அன்பிற்குரிய குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் தினம்

இதுதொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் முதல் பிரதமரும், குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டவருமான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், என் அன்பிற்குரிய குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் வளர்ச்சி

கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், ஜனநாயக மாண்புகளைப் பாதுகாத்தல், சமூக நீதியை நிலைநாட்டுதல், மதச்சார்பின்மையைப் பேணுதல் எனப் பல்வேறு துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெருமைக்குரியவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆவார்.

ஆற்றல்மிகு இந்தியா

“இன்றைய குழந்தைகளே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள்” என்ற பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் சிந்தனைக்கேற்ப, குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும், உரிய களத்தையும் அமைத்துத் தந்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, வெற்றி வானில் உலாவரச் செய்வோம்! வளமிக்க தமிழகத்தையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்கிடுவோம்!

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X