போரை மாய்ப்போம்; மனிதம் காப்போம் - மு.க.ஸ்டாலின் பதிவு

பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
போரை மாய்ப்போம்; மனிதம் காப்போம் - மு.க.ஸ்டாலின் பதிவு
Published on

சென்னை,

உலக அகதிகள் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் உலகெங்கிலும் உள்ள அகதிகளை கவுரவிக்கும் ஒரு சர்வதேச தினமாகும். உலக அகதி நாள் ஆண்டுதோறும் ஜூன் 20-ந்தேதி நினைவுகூரப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், இன்று உலக அகதிகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள். மனிதத்தைக் கொல்லும் போர்களால் வாழ்விழந்து ஏதிலிகளாய் புலம்பெயர்ந்தவர்களை அன்பால் அரவணைப்போம். நமது திராவிடமாடலில் "அகதிகள் முகாம்" என்பதை "மறுவாழ்வு முகாம்" எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்! வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்கிறோம். போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம்!" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com