"ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்தே தேர்தலை சந்திப்போம்" டி.டி.வி.தினகரன் பேட்டி

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்தே தேர்தலை சந்திப்போம் என டி.டி.வி.தினகரன் கூறினார்.
"ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்தே தேர்தலை சந்திப்போம்" டி.டி.வி.தினகரன் பேட்டி
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது பற்றி நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும் அவர் ஒரு கட்சியின் தலைவர். அதனால் இந்த பயணத்தை மேற்கொள்கிறார். தி.மு.க.வின் 2-வது ஊழல் பட்டியல் வெளியிட்டது குறித்து இன்னும் முழுமையான விவரம் கிடைக்கவில்லை.

ஓ.பன்னீர்செல்வம்

வரும் நாடாளுமன்ற தேர்தலை ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துதான் சந்திப்போம். இனி வரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் சேர்ந்துதான் பயணிப்போம். என்னை பா.ஜனதா மாநில தலைவர் நடைபயணத்திற்கு அழைக்காதது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வின் நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதத்தில் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com