

சென்னை,
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று(நவம்பர் 14) குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;-
“குழந்தைகளின் புன்னகையே தேசத்தின் மகிழ்ச்சி! அவர்களின் எதிர்காலமே நாட்டின் உண்மையான வளர்ச்சி! இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 14-ந்தேதி கொண்டாடப்படும் தேசிய குழந்தைகள் தினத்தில், அனைத்து குழந்தைச் செல்வங்களுக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான கல்வி, சத்தான உணவு, சிறந்த மருத்துவ வசதி, பாதுகாப்பான சூழல் மற்றும் சமமான வாய்ப்புகளைப் பெற்று, மகிழ்ச்சியுடனும் வேண்டும். தன்னம்பிக்கையுடனும் வளர குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள், குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் பாகுபாடுகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
குழந்தைகளின் கனவுகளைக் காப்பதும், அவர்களின் உரிமைகளை உறுதி செய்வதும், ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதும் நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். குழந்தைகளைப் பாதுகாப்போம்! அவர்களின் கனவுகளை வளமான பாரதத்தை உருவாக்குவோம்! அனைத்து குழந்தைச் செல்வங்களுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.