நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவோம் - நயினார் நாகேந்திரன்

கைத்தறி பொருட்களை ஆதரிப்போம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவோம் - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

“நம் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், கைவினைக் கலையையும் தலைமுறைகள் தாண்டி பாதுகாத்து வரும் கைத்தறி நெசவாளர்களின் அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் மனமார்ந்த தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துகள்!

கைத்தறியில் உருவாகும் ஒவ்வொரு ஆடையும் நம் மண்ணின் அடையாளத்தையும், நம் கலாச்சாரத்தின் பெருமையையும் உலகிற்கு எடுத்துரைக்கிறது.

கைத்தறி பொருட்களை ஆதரிப்போம். நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவோம். நம் பாரம்பரியத்தைப் போற்றி, அடுத்த தலைமுறைக்கும் பெருமையுடன் கொண்டு சேர்ப்போம்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com