விஜய் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் முரணாக இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை எழுந்தது.
விஜய் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்
Published on

திருச்சி கிழக்கு தொகுதியை சேர்ந்த முன்னாள் அரசு கல்லூரி பேராசிரியர் தமிழரசன் இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. தலைவர் விஜய் குறித்து ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், அனைத்து 'லெட்டர்பேடில்' த.வெ.க. தலைவர் விஜய் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் வேட்புமனுவில் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் தனது உண்மையான பெயர் என்ன என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவருடைய மனுவை நிராகரிக்க வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com