மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது மனைவியை கொலை செய்தார்.
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
Published on

கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 45) என்பவர் தனது மனைவி சாந்தியை கொலை செய்த வழக்கில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் நேற்று பாலமுருகனை குற்றவாளி என உறுதி செய்து, அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட டி.எஸ்.பி. சுனில் மற்றும் இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்னராஜ், தற்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் கணேசன் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com