

விழுப்புரம்,
விழுப்புரம் அருகே வீட்டின் அருகில் இருந்த தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில், வீட்டுக்குள் இருந்த 18 வயது பாலிடெக்னிக் மாணவர் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள வி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி மகன் ஸ்டாலின் (வயது 18). இவர் கப்பியம்புலியூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், தனது தாய் சரிதாவுடன் (40) வீட்டில் இருந்தார்.
அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதற்கிடையே அவரது வீட்டின் சுவர் அருகில் இருந்த தென்னை மரத்தின் மீது திடீரென மின்னல் தாக்கியது.
இதில் மரத்தின் அருகே வீட்டுக்குள் இருந்த ஸ்டாலினும் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.