குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நாளை தொடக்கம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை கடந்த 29-ந்தேதி அன்று முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைப்பதாக இருந்தது.
குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நாளை தொடக்கம்
Published on

சென்னை,

முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றவுடன், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து, இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த அதிரடிப்படையில் இடம்பெறும் பெண் போலீஸ் மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு நீல நிற சட்டை, காக்கி நிற பேண்ட் என சிறப்பு சீருடை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கருப்பு நிற தொப்பியும். கருப்பு நிற ஷூ-வும் வழங்கப் பட்டுள்ளது.

நாளை தொடக்கம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை கடந்த 29-ந்தேதி அன்று முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக கடைசி நேரத்தில் இந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதல்-அமைச்சர் விஜய் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. சென்னையில் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தவுடன். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தங்கள் பணியை தொடங்க உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com