சிங்கப்பெண் அதிரடிப்படை: நாளை தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் விஜய்

நேவி ப்ளு கலரில் அரை-கை மேல் சட்டையும், காக்கி கலர் பேண்டும் சீருடையாக கொடுக்கப்பட உள்ளது.

சிங்கப்பெண் அதிரடிப்படை
Published on

சென்னை,

த.வெ.க. தலைவர் விஜய், முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

இந்த அதிரடிப்படையில் இடம்பெறும் பெண் போலீஸ் மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு சிறப்பு சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் உள்ள பெண் சப்-இன்ஸ்பெக்டர் அணிந்துள்ள சீருடைதான் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் இடம்பெறும் போலீசார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அணியும் சீருடையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சீருடை வழக்கமான போலீசார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அணியும் சீருடை அல்ல.

மிடுக்கான உடை

நேவி ப்ளு கலரில் அரை-கை மேல் சட்டையும், காக்கி கலர் பேண்டும் சீருடையாக கொடுக்கப்பட உள்ளது. கருப்பு கலர் தொப்பியும், கருப்பு கலர் ஷூ-வும் அணிந்து பார்ப்பதற்கு மிடுக்காக காணப்படும் வகையில் இந்த சீருடை உள்ளது.

சிங்கப்பெண் அதிரடிப்படையின் தொடக்கவிழா நேற்று ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடக்க இருந்தது. முதல்-அமைச்சர் விஜய் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருந்தார். முதல்-அமைச்சர் நேற்று டெல்லி சென்றுவிட்டதால், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழா தள்ளிவைக்கப்பட்டது.

இந்தநிலையில், நாளை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சி சிங்கப்பெண் சிறப்பு படையை தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் விஜய்.

X

Daily Thanthi
www.dailythanthi.com