டாஸ்மாக் கடை சுவரில் ஓட்டைபோட்டு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு...!

திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மது பாட்டில்களை மர்மநபர்கள் திருடியுள்ளனர்.
டாஸ்மாக் கடை சுவரில் ஓட்டைபோட்டு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு...!
Published on

வெம்பாக்கம்,

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த அப்துல்லாபுரத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் சதாசிவம் என்பவர் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். நேற்று இரவு 10 மணிக்கு வியாபாரம் முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு இருப்பதைக் கண்டு சூப்பர்வைசர் சதாசிவத்திற்கு தகவல் தெரிவித்தனர். சதாசிவம் இது குறித்து தூசி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்று அங்கு இருந்த ரூ.30,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com