மது விற்றவர் கைது

கூடலூர் பகுதியில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மது விற்றவர் கைது
Published on

கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் நேற்று கூடலூர் காளியம்மன் கோவில் தெரு, வடக்கு ரத வீதி, எல்.எப்.ரோடு ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது புதிய பஸ் நிலையம் அருகே மேலக்கூடலூர் முத்தையா தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 48) என்பவர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com