மது விற்றவர் கைது

பாளையங்கோட்டையில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
மது விற்றவர் கைது
Published on

பாளையங்கோட்டை மார்கெட் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பாளையங்கோட்டை கோட்டூர் ரோடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 25) சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அவரை விசாரிக்க சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மது விலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.490 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com