அரசு பள்ளி மாணவர்களுக்கான இலக்கிய, வினாடி-வினா மன்ற போட்டிகள்; 21-ந்தேதி தொடங்குகிறது

பள்ளி அளவில் நடக்கும் மன்ற போட்டிகளில் ஒரு போட்டியிலாவது ஒவ்வொரு மாணவரையும் பங்கேற்க செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான இலக்கிய, வினாடி-வினா மன்ற போட்டிகள்; 21-ந்தேதி தொடங்குகிறது
Published on

சென்னை,

அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கான மன்றச் செயல்பாடுகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றன.

அதன்படி, 2025-26-ம் ஆண்டுக்கான இலக்கிய மன்றம், வினாடி வினா மன்ற போட்டிகள் பள்ளி அளவில் வருகிற 21-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. போட்டிக்கான தலைப்புகள், போட்டிக்கான மதிப்பீட்டு படிவம் மற்றும் பங்கேற்பாளர்கள், வெற்றியாளர்களின் விவரங்கள் எமிஸ் தளத்தில் உள்ளீடு செய்வதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

பள்ளி அளவில் நடக்கும் மன்ற போட்டிகளில் ஒரு போட்டியிலாவது ஒவ்வொரு மாணவரையும் பங்கேற்க செய்ய வேண்டும். இலக்கிய போட்டியை பொறுத்தவரையில், கட்டுரை எழுதுதல், கதை கூறுதல், பேச்சு, கவிதை எழுதுதல் போன்ற பிரிவுகளில் நடைபெறும்.

வினாடி-வினா போட்டியை பொறுத்தவரையில் 3 சுற்றுகளாக ஒவ்வொரு குழுவிலும் 2 பேர் இருக்கும் வகையில் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் 10 மதிப்பெண் வீதம் 30 மதிப்பெண்களுக்கு நடத்தி வெற்றியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com