இலக்கிய மன்றம் தொடக்கவிழா

கருங்குழி அரசு பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்கவிழா
இலக்கிய மன்றம் தொடக்கவிழா
Published on

வடலூர்

வடலூர் அருகே உள்ள கருங்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்கவிழா நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் கனகசபை தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் சபாநாயகம் வரவேற்றார். பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் நவஜோதி கலந்துகொண்டு இலக்கிய பேருரை ஆற்றினார். விழாவில், மாணவ, மாணவிகளுக்கான, பல்வேறு இலக்கிய போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியை ஜாக்குலின் நன்றி கூறினார். நிகழ்ச்சியை தமிழாசிரியர் தேவராஜன் தொகுத்து வழங்கினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com