9 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

9 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை மறுநாள் முதல் பயன்பாட்டிற்கு வருகின்றன.
9 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
Published on

அரியலூர் மாவட்டத்தில் கரீப் கே.எம்.எஸ். 2022-23 சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு 4-ம் கட்டமாக அரியலூர் வட்டத்தில் மஞ்சமேடு, தூத்தூர், கள்ளூர், முடிகொண்டான், திருவெங்கனூர், திருமானூர், கரைவெட்டி, குந்தபுரம், செந்துறை வட்டத்தில் படைவெட்டிகுடிகாடு ஆகிய 9 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராமங்களில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகில் உள்ள விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறலாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com