

சென்னை,
சென்னை ஆவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வங்கிகள் மூலம் நடைபாதை வியாபாரிகளுக்கு 10 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் நாசர், 100 வியாபாரிகளுக்கு தலா 10 ஆயிரம் வீதம், மொத்தம் 10 லட்சம் ரூபாய் கடன் உதவியும், அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கினார்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நாசர், வியாபாரிகளுக்கு தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்த உதவி வழங்கப்பட்டதாகவும், தொடர்ந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.