திண்டுக்கல் அருகே கடன் வாங்கி தருவதாக மோசடி; பெண் கைது

திண்டுக்கல் அருகே கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் அருகே கடன் வாங்கி தருவதாக மோசடி; பெண் கைது
Published on

கன்னிவாடி அருகே உள்ள தெத்துப்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி கரியமாலா. தையல் தொழிலாளி. இவர் புதிதாக எந்திரங்கள் வாங்கி தையல் தொழிலை மேம்படுத்த நினைத்தார். அதற்கு போதிய பணம் இல்லாததால், வங்கியில் கடன் வாங்க முடிவு செய்தார்.

அப்போது திண்டுக்கல்லில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் ராஜதானிகோட்டை பகுதியை சேர்ந்த முத்துபாண்டியம்மாள் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது முத்துபாண்டியம்மாள் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி, கரியமாலாவிடம் ரூ.30 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் பேசியபடி கடன் வாங்கி கொடுக்காததோடு, ரூ.30 ஆயிரத்தை திரும்ப கொடுக்கவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த கரியமாலா திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துபாண்டியம்மாளை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com