ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜு

ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜு
Published on

சென்னை,

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில், 2 கட்டங்களாக, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும், தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

உள்ளாட்சித் தேர்தல் பதவிகள் சில பகுதிகளில் ஏலம் விடப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது;-

அதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்கள் குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும்.

உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லாது என்று தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com