காஷ்மீரில் உள்ளூர் இளைஞர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடவில்லை: அமித்ஷா பேச்சு

கடந்த 2019-ம் ஆண்டு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்று அமித்ஷா கூறினார்.
அமித்ஷா
அமித்ஷா
Published on: 

அருணாசல பிரதேசத்தில் 11,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் சியாங் அப்பர் மல்டிபர்பஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தால் தங்களது நிலங்கள், வாழ்வாதாரம் மற்றும் பாரம்பரிய கலாசாரங்கள் பாதிக்கப்படலாம் என அப்பகுதி பழங்குடியின மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலையில், அருணாசல பிரதேசத்திற்கு சென்றுள்ள அமித்ஷா, பண்டர்தேவாவில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது அமித்ஷா பேசியதாவது; சியாங் பகுதி மக்களின் உணர்வுகளையும், அச்சங்களையும் தாம் புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மக்களின் கவலைகளுக்கு சாதகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். உள்ளூர் மக்களின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் மத நம்பிக்கைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் திட்டம் முன்னெடுக்கப்படும்” என்றார்.

காஷ்மீர் இளைஞர்கள் குறித்து அமித்ஷா பேச்சு

தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்துப் பேசிய அவர், 35 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த வன்முறை மற்றும் அமைதியின்மைக்குப் பிறகு தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்கள் யாரும் பயங்கரவாதத்தில் ஈடுபடவில்லை . கடந்த 2019-ம் ஆண்டு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை ஒழித்தது மட்டுமின்றி, மக்களிடையே நிலவிய பாகுபாடு மற்றும் தனிமைப்படுத்தும் போக்கை முடிவுக்குக் கொண்டுவந்ததும் இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம்” என்றார்.

X