

சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு தொடர்பான பட்டப்படிப்பை படித்து முடித்தார். இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் கடந்த 4-ந்தேதி சென்று சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார். அப்போது அவர், 2 வாரங்கள் லண்டனில் தங்கி இருப்பேன் என்று தி.மு.க.வினருக்கு எழுதிய கடித வடிவிலான அறிக்கையில் தெரிவித்தார்.
லண்டன் சென்ற மு.க.ஸ்டாலின் கடந்த 14-ந்தேதி அன்று பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். பட்டம் பெற்ற பேரன் இன்பநிதியை கட்டியணைத்து வாழ்த்தினார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் 2 வார கால லண்டன் பயணத்தை முடித்துகொண்டு இன்று இரவு சென்னை திரும்பினார் அப்போது அவருக்கு பொன்னாடை, புத்தகங்கள் வழங்கி முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றனர். தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு கோஷங்கள் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.