திருநெல்வேலியில் விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை

வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர், குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
திருநெல்வேலியில் விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை
Published on

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் கனி. இவருடைய மகன் நாராயணன் (வயது 22), லாரி டிரைவர். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று நாராயணன் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கியுள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நாராயணன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com